கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் யூகி. படத்தில் பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படத்திற்கு பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதியுள்ளார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது.