முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் புதிதாக 5,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவோரின் எண்ணிக்கை 65,732 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

 

நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.44 கோடியாக இருக்கும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.38 கோடியாக உள்ளது. மொத்த பாதிப்பில், உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. நாட்டில் கொரோனா நோயாளிகளின் விகிதம் 0.15 சதவீதமாக உள்ளதாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.66 சதவீதமாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 1.70 சதவீதமாகவும், வாரந்தோறும் தொற்று உறுதியாகும் விகிதம் 2.64 சதவீதமாகவும் உள்ளது.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசு துணை தலைவர் ஆனார் விவசாயி மகன்

Web Editor

திமுகவில் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?

Dinesh A

EWS 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல – வைகோ

EZHILARASAN D