கொளத்தூர் இராஜாத் தோட்டம் திட்டப் பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகளையும், கருணைத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராஜாத் தோட்டம் திட்டப் பகுதியில், மறுகுடியமர்வு செய்யப்படவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்வில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆணைகளையும், கருணைத் தொகையாக தலா ரூ.24,000/- வீதம் மொத்தம் ரூ 20.16 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.