முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!

கொரோனா தொற்று அறிகுறியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர்.

சேரன்மகாதேவி அருகே 77 வயது மூதாட்டி கொரானா அறிகுறியுடன் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சியினரைத் தொடர்பு கொண்டு நல்லடக்கம் செய்யக் கோரிக்கை விடுத்தனர்.

அதே போலத் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 43 வயது ஆண் உடலை‌யும் சுகாதார ஆய்வாளரின் வேண்டுகோளை ஏற்று, உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இறந்தவரின் மதப்பிரகாரம்‌ கல்லறைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 20 நாட்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர், அடுத்தகட்ட சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் சேரன்மகாதேவி கல்லறையில் அவரது மதப்பிரகாரம் நல்லடக்கம் செய்தனர் எஸ்டிபிஐ கட்சி தன்னார்வ குழுவினர்.

Advertisement:

Related posts

முதலமைச்சர் பழனிசாமிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்!

Karthick

பெற்ற தாயை மகனே அடித்துக் கொலை செய்த பரிதாபம்!

Jayapriya

குடியரசுத் தினத்தன்று திமுக சார்பில் டிராக்டர் பேரணி!

Saravana