ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

மே மாதம் தொடங்கவிருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில், வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு மே 3-ம் தேதி முதல்…

மே மாதம் தொடங்கவிருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில், வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு மே 3-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்திருந்த நிலையில், அந்த தேர்வுகள் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் மே 17-ம் தேதி முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான வினாத்தாள் தயாரிப்பு பணிகள் முடிவடையாததால், தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்காது என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், மே 10-ம் தேதி முதல் தொடங்கவிருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை ஐ.ஐ.டி.யும் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.