நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை…

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த அவர், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply