இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதே போன்று கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாடுக்கு வர வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்தது. இந்த நிலையில், அவசர கால பயன்பாட்டுக்கு அந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் தயாரிக்கப்பட்டுவரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியையும் நிபுணர் குழு செய்தது. இதையடுத்து, அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்சினை பயன்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், கோவாக்சின் தடுப்பூசி மக்கள் பயன்பாடுக்கு வர வாய்ப்புள்ளது.







