தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியாகியது. இதனையடுத்து தமிழகத்தில் நிலவிடும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.







