கொரோனா தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவத்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் தெரிவித்ததாவது..
” கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 1முதல் அரசு
மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளதால் அது சரியாக
பின்பற்றப்படுகிறதா என மருத்துவமனையில் உள்ள அவசர
சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொது பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு நிறுத்தி விட்டதால் மாநில அரசுகளுக்கு
அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதனால் கொரானோ தடுப்பூசி மற்றும் பூஸ்டர்
தடுப்பூசி என்பது தமிழகஅரசு மருத்துவமனையில் இருப்பு என்பது இல்லை என
குறிப்பிட்டார் தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனையில் இருப்பு இருந்தால்
அதனை போட்டுக்கொள்ளலாம்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் தற்போது 2சதவிகித ரேண்டம் பரிசோதனை மட்டுமே செய்கின்றனர். அதில் நாள் ஒன்றிற்கு 8முதல் பத்து கொரானோ பாதிப்பு கண்டறியப்படுகிறது.அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அனைவரையும் பரிசோதிக்கும் வகையில் இதுவரை மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை.
அதே நேரத்தில் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றல் 90 சதவிகிதம் உள்ளதால்
தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்பு இல்லை. அதே சமயத்தில் தேவையான
அளவிற்கு கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் தயாராக
உள்ளது. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும் ஊரடங்கு என்பது தற்போது இல்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்







