கலாஷேத்ரா பாலியல் புகார்: முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறை

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை என புகார் அளித்த முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த, தமிழ்நாடு காவல்துறை கேரளா விரைந்துள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்…

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை என புகார் அளித்த முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த, தமிழ்நாடு காவல்துறை கேரளா விரைந்துள்ளது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்த கலாஷேத்ரா முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவர் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் அடையாறு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், புகார் அளித்த முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு காவல்துறையினர் கேரளா விரைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.