கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நிவாரண…

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம்பெறக்கூடாது: உயர்நீதிமன்றம்
கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் இடம் பெறக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் வைக்கப்படுவதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுவது எக்காரணம் கொண்டும் அரசியல் நிகழ்வாக மாற்றப்படக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உதவித்தொகை வழங்கும் போது, கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.