முக்கியச் செய்திகள் உலகம்

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை

மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். அந்நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

இந்நிலையில் 76 வயதாகும் ஆங் சான் சூக்கிக்கு எதிராக 12க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க வகையில் 2 குற்றச்சாட்டுக்களின் கீழ், ஆங் சான் சூக்கி கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாக்கி டாக்கியை வைத்திருந்தது, தொலைத்தொடர்பு விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் புதிதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஆங் சான் சூக்கி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை

Gayathri Venkatesan

எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது: டிடிவி.தினகரன்

Niruban Chakkaaravarthi

“மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை”: டிடிவி தினகரன்

Halley Karthik