இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக…

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதாக இரண்டாயிரத்து 593 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 44 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 755 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 27ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து தமிழ்நாட்டில் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.