சாலை தடுப்பில் கார் மோதியதில் மூவர் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் – மனைவி உள்பட மூவர் உயிரிழப்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் – லதா தம்பதி, தங்கள்…

பெரம்பலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் – மனைவி உள்பட மூவர் உயிரிழப்பு

திண்டுக்கல்லைச் சேர்ந்த கமலக்கண்ணன் – லதா தம்பதி, தங்கள் உறவினர்கள் மூன்று பேருடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி, சுமார் 100 அடி தூரம் உருண்டுச் சென்று விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: சமையல் பொருட்கள், டி.வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

இதில் கமலக்கண்ணன் – லதா தம்பதி, அவர்களின் உறவினர் வேம்பு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணித்த ராமச்சந்திரன், மணிமேகலை ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.