வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து ரூ. 4.50 கோடி கொடுத்த நிலையில், படத்தை முடிக்கவில்லை என வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒப்பந்தத்தில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது என நீதிபதி அப்துல் குத்தூஸ் சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து செப்டம்பர் 19-ஆம் தேதி ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.







