நடிகர் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் சாந்தகுமார் உருவாக்கிவரும் “ரசவாதி” திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சாந்தகுமார் ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் சாந்தகுமார், தற்போது புதிய கிரைம் ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ரசவாதி’ – The Alchemist’ என்ற படத்தை அறிவித்துள்ளார்.
இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் கொடைக்கானல், மதுரை, கடலூர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
’மௌனகுரு’ மற்றும் ’மகாமுனி’ படங்களுக்கு பிறகு சாந்தகுமாருடன் மூன்றாவது முறையாக ‘ரசவாதி’ படம் மூலம் எஸ்.எஸ்.தமன் இணைந்து இசையமைக்கிறார். இயக்குநர் சாந்தகுமாரின் முந்தைய இரண்டு படங்களுமே தனித்துவமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. அதுபோல, ‘ரசவாதி’ திரைப்படமும் நிச்சயம் ஒரு புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
Here is the Second Look of My 3rd Film #Rasavathi #TheAlchemist #Santhakumar @iam_arjundas @actortanya @actorramya @GMSundar_ @MusicThaman @EditorSabu @SPremChandra1 @minu_jayebal @dancersatz @YugabhaarathiYb @iam_rishikanth @saranelavarasu @ReshmaVenkates1 @rchandrumovie pic.twitter.com/Us7PIL4Xcp
— Santhakumar (@Santhakumar_Dir) August 29, 2023
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் இதற்கு முன்னர் எடுத்த இரண்டு படங்களுமே விருதுகளை குவித்துள்ளன. அந்த வரிசையில் ரசிகர்கள் இந்த படத்தையும் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்திற்கான பாடல், டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ வெளியீடு விரைவில் வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.







