சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும் 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும், 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 22 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரியை…

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மேலும், 30 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 22 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரியை சேர்ந்த மேலும் 352 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 26 மாணவர்கள், நான்கு ஊழியர்கள் உட்பட மொத்தம் 30 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்லூரி விடுதி மூடப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அனுப்பப்பட்டனர். இதேபோல, குரோம்பேட்டையில் உள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றும 13 ஊழியர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 18-ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 17 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.