பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

சோனியா காந்திக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு காங்கிரஸை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை சோனியா காந்தி உள்பட காங்கிரஸ்…

சோனியா காந்திக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2024 தேர்தலுக்கு காங்கிரஸை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை பிரியங்கா காந்தி சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால், கொரொனா நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘உண்மையான எதிர்கட்சி பாமக தான் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்’

இதற்கு முன்னதாக நேற்று, சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில், பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது மீண்டும் கொரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.