முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா – 41 பேர் பலி

இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,43,98,696 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 87,311 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 597ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 83 ஆயிரத்து 788ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 211.39 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில்மட்டும் 25,86,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காந்தியின் நினவுநாளில் மக்களுடன் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

G SaravanaKumar

பதவியேற்ற கவுன்சிலர்கள் கடத்தல்

Halley Karthik

முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை

Vandhana