தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 13,000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக உள்ளது. இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனா…

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 592 ஆக உள்ளது.

இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாக 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 8 லட்சத்து 33 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 705 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 8 லட்சத்து 15 ஆயிரத்து 516 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply