சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு!

சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைப் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர்…

சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைப் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திலேயே, சென்னையில் பாதிப்பு அதிகத்து வருவதாகவும், கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு அதிகம் உள்ளாவதாக கூறிய அவர், கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.