தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. முதலில் அதிகரித்து வந்த நிலையில், பின்னர் குறைந்து வந்தது. இந்நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே, தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியிருந்த நிலையில், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் புஷன், தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்