கோரமண்டல் ரயில் விபத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 இன்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நாளை மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும்.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த விபத்தில் 132 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக ஒரிசா மாநில அரசின் முதன்மை செயலாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 50 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது. கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர அழைப்பு சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
https://twitter.com/narendramodi/status/1664665463450918913
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதை கேட்டு கவலைக்குள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் பேசி மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். ” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







