முக்கியச் செய்திகள் தமிழகம்

மோப்ப நாய்க்கு கொடுக்க வேண்டிய கஞ்சாவை புகைத்த காவலர்கள் பணியிடைநீக்கம்

புதுக்கோட்டையில் மோப்ப நாய் பயிற்சிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட கஞ்சாவை முறைகேடாக எடுத்து பணியின் போது கஞ்சா குடித்துவிட்டு பணிக்கு வந்ததாகவும் கூறி மோப்பநாய் பிரிவில் பணியாற்றியவரும் ஆயுதப் படை காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வருபவர்கள் அஸ்வந்த் சேவியர் ஜான் மற்றும் பழனிச்சாமி இவர்கள் மோப்பநாய் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் மூப்பனாய் பிரிவு ஆயுதப்படை பிரிவு ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மோப்ப நாய் பிரிவில் மோப்ப நாய் பயிற்சிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட 180
கிராம் கஞ்சா காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் லெட்ஜ்சரில் இருப்பு
காண்பிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து அஸ்வந்த் சேவியர் ஜான் மற்றும் பழனிச்சாமி ஆகியோரிடம்
விசாரணை செய்தபோது அரசு சார்பில் வழங்கப்பட்ட 180 கிராம் கஞ்சாவை பணியின்போது அவ்வப்போது சிறிது சிறிதாக எடுத்து பயன்படுத்தி விட்டதாக அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

மேலும் பல்வேறு கஞ்சா வியாபாரிகளுடன் இந்த மூன்று பேரும் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து மூன்று காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக பயங்கரவாதத்திற்கு எப்போதும் துணை போனதில்லை- அமைச்சர் துரைமுருகன்

G SaravanaKumar

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை விரைவில் குறையும்: எல்.முருகன்

EZHILARASAN D

நெல்லை எஸ்.பி-க்கு பிடிவாரண்ட் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு

EZHILARASAN D