முக்கியச் செய்திகள் உலகம்

உக்ரைன் விவகாரம்: புதினுடன் 7ஆம் தேதி பேசுகிறார் பைடன்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக வரும் 7ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ டைபன் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.

சோவியத் ஒன்றியம் உடைந்த பின், 1991ஆம் ஆண்டு உக்ரைன் விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. கடந்த 2014ஆம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. இதனை அடுத்து, நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், உக்ரைன் மீது படை எடுக்க எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனிற்கு உதவ நேட்டோ கூட்டமைப்பு படைகளையும் ஏவுகணையும் நிலை நிறுத்தினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்று புதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 7 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் கலந்துரையாடுவார் என வெள்ளை மாளிகை தெரிவித் துள்ளது. மேலும், இருநாடுகளுக்கு இடையேயான பிராந்திய பிரச்னைகள் குறித்தும் விவாதிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதை கிரம்ளின் மாளியை செய்தி தொடர்பாள்ர் ட்மிட்ரி பெஸ்கோவும் (Dmitry Peskov) உறுதிப்படுத்தினார். செவ்வாய்க்கிழமை மாலை இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் எவ்வளவு நேரம் பேசுவார்கள் என்பதை அவர்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சீன இயக்குனர் க்ளோயி சாகோ முதல் டெனெட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வரை: யாருக்கெல்லாம் ஆஸ்கர் விருது!

Halley Karthik

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: வீட்டில் தனிமை சிகிச்சை!

Halley Karthik

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு மாற்றி அரசாணை!

Niruban Chakkaaravarthi