இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த குடியரசு தலைவர் திரௌபதி மர்மு இன்று
மதியம் கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாட்டுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். இந்த பயணத்தின் போது மதுரைக்கு விமானம் மூலம் சென்று அங்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அதன் பின்னர் கோயம்புத்தூர் சென்று ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடைபெரும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதாக இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.

இதனடிப்படியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் கோயம்புத்தூர் திரும்பினார். கோவை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர், மேயர் ஆகியோர் வரவேற்றனர்.
இதனையும் படியுங்கள் : வள்ளல் மாதிரி வாழ்ந்த மனிதர் மயில்சாமி- நடிகர் தம்பி ராமையா உருக்கம்
அதனைத்தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு சென்றடைந்த திரௌதி முர்முவை ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வரவேற்றார். இதனையடுத்து ஈஷாவில் உள்ள சந்திரகுண்டம், சூர்யகுண்டம்,லிங்க பைரவி, தியான லிங்கம் ஆகியவற்றை தரிசித்தவர் தியானலிங்கத்தின் முன்பு அமர்ந்து தியானம் செய்து பஞ்சகிரியை பூஜையில் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் குடியரசுத் தலைவர் தங்கினார். இந்நிலையில் இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கவிருந்த குடியரசு தலைவரின் பயணம் குன்னூரில் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோவை விமான நிலையத்திலிருந்து 12.30 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
– யாழன்







