முக்கியச் செய்திகள் சினிமா

வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ புகழின் புதிய கார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியால் உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கும் நடிகர் புகழ் நேற்று சொந்தமாக ‘ஹூண்டாய் கிரெட்டா’ என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கடலூரில் பிறந்த புகழ் சென்னையில் நடிப்புக்காக வாய்ப்புத் தேடி அலைந்த காலத்தில் மெக்கானிக், ஹோட்டல் சர்வர், கார் வாஷ் செய்வது போன்ற வேலைகளை செய்துவந்தவர்.

நடிக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் அலைந்து திரிந்த புகழுக்கு வாய்ப்பின் வாசல் கதவை திறந்தது விஜய் தொலைக்காட்சி. விஜய் டிவியில் தொடக்க காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் சிறு வேடங்களில் மக்களுக்கு அறிமுகமானார். தற்போது தன்னுடைய கடின உழைப்பால் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் புகழ்.

நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் வரிசையில் தற்போது விஜய் டிவியின் மற்றொரு நட்சத்திரமாக உருவாகியுள்ள புகழ் நேற்று ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா (Hyundai Creta) என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘New Car’ என பதிவிட்டு தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்துடன் புதிய காருடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இதுவரை புகழின் இந்த பதிவை முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

இது குறித்த தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ள புகழ் அதில் “நான் ஒரு கார் எடுத்து இருக்கேன். அத உங்களிடம் சொல்லவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. நான் இன்றைக்கு இந்த நிலையை அடைந்திருப்பது உங்களால் மட்டும்தான் உண்மையில் நான் பேசினால் எமோஷ்னல் ஆகிவிடுவேன் என்பது உங்களுக்கே தெரியும். நீங்க வாங்க நாம்ப காரை பார்ப்போம்” என கூறிவிட்டு காரை ஓட்டிக்கொண்ட தன்னுடைய மகிழ்ச்சி பதிவுச் செய்துள்ளார். தொடர்ச்சியாகப் பேசிய புகழ் “ இதுவரையிலேயே என்னுடைய பரம்பரையிலேயே முதல் காரை நான்தான் வாங்கி இருக்கேன், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

அம்மாக்கு எல்லாம் போன் செய்து சொன்னவுடன் அப்படியே ஒரு மாதிரி அழுதுவிட்டார்கள். ஏம்புள்ள காரை எடுத்திருச்சு.. எடுத்திருச்சுன்னு அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் சொன்னாங்க. என்னோட குக் வித் கோமாளி குழுவும் நான் காரை வாங்கி இருக்கேன்னு சொன்னபோது ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நாம் ஜெயிக்கவேண்டும் என்றால் நம்மை சுற்றி உள்ளவர்களும் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவும் ஆசையும் அதுதான்.. எல்லாரையும் சிரிக்கவைக்கவேண்டும் எல்லாரும் சந்தோஷமாக இருக்கவேண்டும். எத்தனையோ கார் வாட்டர் வாஷக்கு வரும்போதெல்லாம் காரை துடைத்தவிட்டு அவங்க தர ரூ.10, ரூ 20 வாங்கி கொள்வேன். ஆனா இன்னைக்கு இது நம்பளோட காரு.. சொந்த காரு… அப்படிங்கற அப்போ…. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. இன்னைக்கு நீங்க இல்லைன்னா நான் இல்லை.. என் குடும்பத்தில் எல்லோருமே டிரைவர் தான். நான் நடிக்க ஆசைப்பட்டபோதே வேண்டாம் என்றார்கள். அதை எல்லாம் மீறி தான் நான் நடிப்பு வேலைக்கு சென்றேன். இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மக்களுடைய அன்பு” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.


ஒருவேளை உணவுக்கே ஓடி.. ஓடி உழைத்த புகழ் நடிப்பின் மீதிருந்த தீராத வேட்கையால் இன்று மக்கள் மனதில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.
புகழின் நகைச்சுவை திறன் அவரை தற்போது தமிழ் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக மாற்றியுள்ளது. நம்மில் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பால் வெற்றி பெற்றால் உண்டாகும் மகிழ்ச்சியான மனநிலைதான் புகழ் கார் வாங்கியதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவருடைய பெயரைப் போலவே புகழுக்குப் பல புகழ்கள் இனிவரும் காலங்களில் வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.

Advertisement:

Related posts

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் சிறுவர்கள்!

Saravana Kumar

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி புதிய கட்சி தொடங்க முடிவு!

Niruban Chakkaaravarthi

ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Karthick