கட்டுநாயக்க விமானம் நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா மற்றும் அவரது குழுவினருக்கு விமானச் சேவை ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரில் நாளையும், நாளை மறுதினமும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காக சென்னையில் இருந்து கொழும்பு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு இசைஞானி இளையராஜா மற்றும் அவரது இசைக்குழுவினர் புறப்பட்டனர்.
முன்னதாக ஸ்ரீலங்காவில் உள்ள கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இளையராஜா மற்றும் இசைக் குழுவினருக்கு விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியுள்ளனர். இதனை விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் குழுவினரோடு அவர்களது ஊழியர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, பாடகர் எஸ்.பி.பி.சரண், பாடகி சுவேதா மோகன், பாடகர் மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இவர்களோடும் விமான சேவை ஊழியர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.







