எந்த படமாக இருந்தாலும் தாழ்த்திப் பேசக்கூடாது: சந்தானம்

எந்த படமாக இருந்தாலும் உயர்த்தி பேசலாமே தவிர, தாழ்த்தி பேசக்கூடாது என ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி…

எந்த படமாக இருந்தாலும் உயர்த்தி பேசலாமே தவிர, தாழ்த்தி பேசக்கூடாது என ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபாபதி’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்கு களில் வெளியாகிறது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

சந்தானம் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், ஜெய்பீம் திரைப் படம் மட்டுமல்ல, எந்த படமாக இருந்தாலும், உயர்த்தி பேசலாம் என்றும் ஆனால், யாரையும் துன்புறுத்துவது போல தாழ்த்தி பேசக்கூடாது என்றும் நடிகர் சந்தானம் கூறினார்.

சாதி மதங்களை கடந்து படம் பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதாகக் கூறிய சந்தானம், இந்த இடத்தில் சாதி குறித்த சர்ச்சைகள் தேவையற்றது என கூறினார். #westandwithsuriya ஹாஷ்டாக் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.