104 வயது பாட்டி ஒருவர் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 100-க்கு 89 மார்க் எடுத்து வாய் பிளக்க வைத்திருக்கிறார்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள திருவன்சூர் ஆயர்குன்னம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் குட்டியம்மா. பள்ளிக்கூடம் பக்கமே போகவில்லை. சிறுவயதில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் கணவர் கடந்த 2002 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அந்த இயக்கம் நடத்திய சக்சாரதா வகுப்பில் சேர்ந்து படித்தார். பின்னர் நடந்த தேர்வில் அவர் 100-க்கு 89 மார்க் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய உள்ளார். அடுத்து அவர் 4 ஆம் வகுப்பு செல்ல இருக்கிறார்.
இதுபற்றி மகிழ்ச்சி பொங்க கூறிய குட்டியம்மா, படிக்கவும் எழுதவும் ஆசிரியை பெஹ்ரா ஜான் கற்றுக் கொடுத்தார். அவர் சொன்னதை செய்தேன் என்று கூறியுள்ளார். ஆசிரிய பெஹ்ரா கூறும்போது, இப்போது குட்டியம்மாவால் எழுத முடியும் என்பதால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
படிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிற குட்டியம்மா, வயதென்பது வெறும் நம்பர்தான் என்பதை உணர்த்தி இருக்கிறார்.








