ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அடுத்த தேர்தல் ஜனவரி மாதத்தில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக தீர்மானம் https://t.co/WciCN2AH8n | #bluesattaimaran | #TamilTalkies | #Review | #Directors | #News7Tamil | #News7TamilUpdates | @tamiltalkies pic.twitter.com/t24iZf6pBY
— News7 Tamil (@news7tamil) December 28, 2021
மேலும், இயக்குநர்களின் படங்களை ப்ளூ சட்டை மாறன் தரக்குறைவாக விமர்சனம் செய்வதாகவும் அதேபோக்கு தொடரும் பட்சத்தில் அவர் இயக்குநர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இயங்குநர் சங்கத்தின் கடந்தக் கால செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








