தொடரும் இழுபறி ; கூட்டணியிலிருந்து விலகுகிறதா சிபிஎம்……? – பெ. சண்முகம் விளக்கம்…!

தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறன்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே 2026 சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த தேர்தம் போல 6 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகள் கோரப்பட்டது. ஆனால் திமுக 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வந்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.  கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் எம்.ஏ. பேபி, தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம், முன்னாள் மாநிலச் செயலர்கள் கே. பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், ஆறுக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது ; திமுகவிடம் நாங்கள் 6 தொகுதிகள் கேட்டோம். அதிக கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், தொகுதிகளை ஒதுக்குவதில் உள்ள சிரமங்களை எங்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களிடம் வலியுறுத்தினார். இது தொடர்பாக எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூடி, முடிவெடுப்போம். தற்போது வரை 6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் குழப்பமில்லை, கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.