தொடரும் மழை : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும்  நிலையில், குறிப்பிட்ட தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி…

தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும்  நிலையில், குறிப்பிட்ட தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில்
நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.  செங்கோட்டை, பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், வடகரை, கணக்கப்பிள்ளை வலசை,  குத்துக்கல்வலசை, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று  தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஏற்பட்டது. மழை தொடர்ந்து வரும் நிலையில், செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் கடையம் கீழப்பாவூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அமிரித் உத்தரவிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.