யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை எஸ்.என்.ஆர் ஆடிட்டோரியத்தில் டாக்டர்.ஷியாம பிரசாத் முகர்ஜி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநர் பேசமாட்டார் என்பதற்காக திமுக வைத்தது தான் சட்டம் என்பதை நிகழ்த்தி
வந்துள்ளனர். பயம் காட்டி அரசியல் செய்யலாம் என நினைக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. அது நடக்காது..அவர் என்னதான் தலைகீழாக நின்றாலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி எனவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி முரளி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்
விருந்தினராக தான் சென்றேன். அது பாஜகவை சேரந்த ஹரிகிருஷ்ணன் ஏற்பாடு செய்த நிகழ்வு. அதிமுக அவரை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து கருத்து கூற முடியாது.
குறிப்பாக மாற்றுக் கட்சியினர் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். மற்ற கட்சியினரை விமான நிலையத்தில் சந்தித்து பேசுகிறோம். இதற்கெல்லாம் கட்சியை விட்டு நீக்கினால் தமிழக அரசியல் எங்கே போய் முடியும். தமிழ்நாடு அரசியல் எப்படி செல்கிறது. யார் யாரை போட்டியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். தமிழகத்தில் யாருக்கு யார் போட்டி என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
குறிப்பாக யாரையும் பலவீனப்படுத்தி பாஜக வளராது. பாஜகவோ அல்லது அண்ணாமலையோ யாரையும் போட்டியாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆரோக்கியமாக தான் அரசியல் செய்ய வந்திருக்கிறேன். சுப்ரமணிசுவாமி பேசுவதெல்லாம் பழைமையான நடைமுறை. நான் யார் காலிலும் விழ மாட்டேன். அப்படி விழுந்தால் தான் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அது எனக்கு தேவையில்லை. வெளியிலிருந்து எங்களுக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை.
கோவைக்கு பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, முத்துசாமி மீது எனக்கு மரியாதை உண்டு. அவர் நேர்மையாக அரசியல் செய்பவர். மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, கர்நாடக தேர்தலில் டி.கே.சிவக்குமார் தனது தேர்தல் அறிக்கையிலே முதலில் குறிப்பிட்டது மேகதாது கட்டுவது தான். அந்த அறிக்கையை வெளியிடும் போது உடன் இருந்தவர் சிதம்பரம். மேகதாது விவாகரத்தில் தமிழ்நாடு அரசு பேசும் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய வேலை ஒருங்கிணைப்பு மட்டும் தான். நான் அரசியலுக்கு வந்ததே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்கு தான். குறிப்பாக டெல்லியில் சென்று அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னைவிட உயர்ந்தவர்கள் உள்ளனர்.
அடுத்த ஊழல் பட்டியலை கோவையில் தான் வெளியிடுவோம். கூட்டணியில் தான் இருக்கிறோம்.கூட்டணி கட்சிகளோடு தான் பயணிக்கிறோம். எங்களுக்கு அவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அறப்போர் இயக்கம் செந்தில் பாலாஜி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு அனைத்து உண்மை அந்த குற்றச்சாட்டுக்கு முழுமையான ஆதரவை அறப்போருக்கு பாஜக தரும். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தததுக்கு பிறகு ஒப்பந்தப்புள்ளி விடுவதில் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து வருகின்றனர்” எனவும்
அண்ணாமலை தெரிவித்தார்.