நீலகிரி மாவட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஓபிஎஸ்
புகைப்படம் நீக்கப்பட்டு புதிய பேனரில் ஈபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி
புகைப்படம் உள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும்
நிலையில் கடந்த 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்து கோஷமிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கருத்து மோதல்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்
என கூறப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுக தலைமை
அலுவலகத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், எஸ்.பி.வேலுமணி ஆகியோரது புகைப்படங்கள்
வைக்கப்பட்டிருந்த பேனர் தற்போது அகற்றப்பட்டு தற்போது எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி பேனர் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விளம்பரங்கள், பேனர்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் மற்றும் புகைப்படம் பெயிண்ட் கொண்டு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் ஓபிஎஸ் பேனர் அகற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.