கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் – AICTE

கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது இந்தியாவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிகள்…

கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது இந்தியாவில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிகள் அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. இப்போது, கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் சமீபத்தில் தளர்வுகளை அறிவிகாலம் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திருந்தது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துவரும் நிலையில் ஒரு சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீட்டித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தொழில் நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழங்கியுள்ள உத்தரவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையின் போது “தெர்மல் ஸ்கேனிங்” மூலம் உடல் வெப்பநிலை கண்டறிய வேண்டும். முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வபோது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.

மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்த இளம் வீரர் பிரக்ஞானந்தா ’

அதேபோல, மாணவர்கள் அல்லது ஊழியர்கள் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவரை சார்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் அல்லது ஊழியர்களில் யாரேனும் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அந்நபரை கல்வி நிறுவனங்களில் நேரடியான வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்க கூடாது எனவும், அனைவரும் கட்டாயம் “ஆரோக்கிய சேது” செயலியை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்கள் படிப்பை தொடரும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனவும், கல்வி நிலையத்தின் வளாகம்,கேண்டின் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, பயன்படுத்தப்படும் முக கவசங்கள் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வழங்கி உடனடியாக இதனை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.