செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியரும், தமிழ்நாட்டை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை தோற்கடித்தார்.
ஆன்லைனில் நடைபெற்று வரும் சாம்பியன் செஸ் போட்டி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாதந்தோறும் ஒன்பது தொடர்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போட்டியில் உலக சாம்பியனான நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனும், 16 வயதே ஆன பிரக்ஞானந்தாவும் மோதினர். இதில், 3-0 என்ற கணக்கில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம் வீரர் பிரக்ஞானந்தா அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
அண்மைச் செய்தி: ‘சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்’
இந்நிலையில், தற்போது சாம்பியன் செஸ் போட்டியின் நான்காவது தொடர் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 5-வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனும், பிரக்ஞானந்தாவும் மோதினர். இதில் 41வது காய் நகர்த்தலில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி 2வது முறையாக பிரக்ஞானந்தா வெற்றிபெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








