நெட்ஃப்ளிக்ஸில் தொடர்ந்து டாப் 10 இடத்தில் துணிவு; உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்!

அஜித் நடித்த துணிவு படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையிலும், டாப் 10 ஆங்கில படங்கள் அல்லாத பிரிவில் துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன் இடன்பெற்றுள்ளது. அஜித், எச்.வினோத், போனி கபூர்…

அஜித் நடித்த துணிவு படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையிலும், டாப் 10 ஆங்கில படங்கள் அல்லாத பிரிவில் துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன் இடன்பெற்றுள்ளது.

அஜித், எச்.வினோத், போனி கபூர் ஆகியோரின் மூன்றாவது படைப்பாகத் துணிவு வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். மேலும் அவரது நெகட்டிவ் ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், துணிவு திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கடந்த 8-ம் தேதி வெளியானது. படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் துணிவு திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அத்துடன் துணிவு திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது முதலே சர்வதேச அளவிலான டாப் 10 பட வரிசையில் இடம் பெற்றது. இந்நிலையில் வார இறுதியில் பல பிரிவுகளில் நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 பட வரிசையை பட்டியலை வெளியிடும்.

அந்த வகையில் துணிவு படத்தின் தமிழ்ப் பதிப்பு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 3-வது இடமும், இந்தி பதிப்பு 4-வது இடமும் பெற்றன. நெட்ஃபிளிக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்தியப் படம் ஒன்று இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையிலும், டாப் 10 ஆங்கில படங்கள் அல்லாத பிரிவில் துணிவு படத்தின் ஹிந்தி வெர்ஷன் இடன்பெற்றுள்ளது.

அத்துடன், அஜித் நடிக்கும் 62-வது படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அஜித் குமார் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிப்பதாகக் கூறப்பட்ட AK62 படம் பிப்ரவரியில் தொடங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது திடீரென இந்த கூட்டணியில் உருவாகவுள்ள படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் AK62 உருவாக உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.