முக்கியச் செய்திகள் இந்தியா

ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

மாணவர்களை ஒன்றாம் வகுப்புக்கு பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020, குழந்தைகளின் அடிப்படைக் கட்டத்தில், அவர்களின் கற்றலை வலுப்படுத்த பரிந்துரைப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, 3 முதல் 8 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 3 வருடங்கள் பிரீ-ஸ்கூல் கல்வியும், 2 வருடங்கள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அங்கன்வாடிகள், அரசு/அரசு உதவி பெறும், தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான அடிப்படைக் கல்வியை மூன்றாண்டுகளுக்கு கொடுக்கும்போதுதான், அவர்களுக்கான அடிப்படை கற்றல் மேம்படும் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை

மேலும் குழந்தைகளின் வயது மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற பாடத்திட்டமும், கற்பித்தலில் பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் இருப்பும், இந்த அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் பாலர் கல்வியில் (DPSE) இரண்டு வருட டிப்ளமோ படிப்பிற்கான செயல்முறையைத் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டமானது, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (SCERT) வடிவமைக்கப்பட்டு, அதன் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மூலம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்

Jeba Arul Robinson

அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது; உயர்நீதிமன்றம்

G SaravanaKumar

இலங்கை கடற்படை அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?: வைகோ கேள்வி

Web Editor