கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் இரண்டாம் கான்ஸ்டான்டைன் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக தனது 82வது வயதில் உயிரிழந்தார்.
கிரீஸ் நாட்டின் மன்னாராக 1964ம் ஆண்டு முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2ம் கான்ஸ்டான்டைன். இவர் தனது 23ம் வயதில் கிரீசின் மன்னராக அரியணை ஏறினார். கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2ம் கான்ஸ்டான்டைனின் நாட்டை விட்டு வெளியேறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், 1974ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார்.
இதனிடையே, கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டான்டைன் இன்று உயிரிழந்தார். வயது முதர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2-ம் கான்ஸ்டான்டைனின் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.