ஆட்டத்தை மீண்டும் தொடங்கும் ’பப்ஜி’: நாளை முதல் ’பேட்டில்கிரவுண்ட்’!

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த PUBG, வேறொரு பெயரில் நாளை முதல் மீண்டும் ஆட்டத்தைத் தொடங்குகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மொத்தமாக கட்டிப் போட்டிருந்த ஆன்லைன் விளையாட்டு pubg. இதை விளையாடியவர்கள் அதற்கு…

ந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த PUBG, வேறொரு பெயரில் நாளை முதல் மீண்டும் ஆட்டத்தைத் தொடங்குகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மொத்தமாக கட்டிப் போட்டிருந்த ஆன்லைன் விளையாட்டு pubg. இதை விளையாடியவர்கள் அதற்கு அடிமையாகவே ஆகி இருந்தனர். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து, நாடு முழுவதும் பப்ஜியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசு பப்ஜியை தடை செய்தது. இந்தியாவில் pubg விளையாட்டு உள்ளிட்ட 118 செயலிகள் தடை செய்யப்பட்டன. இந்தத் தடைக்கு ஒருபுறம் வரவேற்பும், மற்றொரு புறம் எதிர்ப்பும் எழுந்தது. பப்ஜிக்கு மாற்றாக பல விளையாட்டு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் pubg -க்கு மாற்றாக எதுவும் வரவில்லை.

இதனால் சோகத்தில் இருந்தவர்களுக்கு, pubg இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்ற செய்தி கடந்த மாதம் வெளியானது. “Battle grounds” என்ற பெயரில் இந்த விளையாட்டு அறிமுகமாகும் என்று கூறப்பட்டது. பப்ஜி விளையாட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், சுமார் ஒரு கோடி பேர், கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த பப்ஜி விளையாட்டு, ‘பேட்டல் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா’ என்ற பெயரில் நாளை முதல் மீண்டும் களமிறங்கிறது. மொபைல் பிளே ஸ்டோரில் மட்டுமே இடம்பெற்றுள்ள இந்த விளையாட்டை, ஆண்டிராய்டு செல்போன்களில் மட்டுமே இப்போது பதிவிறக்கம் செய்ய முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.