தொகுதி மறுவரையறை மசோதா: அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டம் தொடக்கம் – திமுக, அதிமுக புறக்கணிப்பு!

தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக எம்பிக்கள் புறக்கணித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி எம்.பிக்கள் கூட்டம் சென்னை கலைவானர் அறங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது.

இந்தக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், சச்சுதாநந்தம், சுப்பராயன், செல்வராஜ், நவாஸ் கனி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், சசிகாந்த் செந்தில், பிரவீன் சக்கரவர்த்தி, சுதா, ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், கோபிநாத், கிறிஸ்டோபர் திலக். உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.