தொடர் விடுமுறை, சொந்த ஊர் சென்ற மக்கள்: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர் சென்றதால் சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகையின் போது…

தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர் சென்றதால் சென்னை பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகையின் போது அவர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். அப்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, காலாண்டு தேர்வு உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இதனால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகளவில் மக்கள் சென்ற காரணத்தாலும், சிறப்பு பேருந்துகளாலும், பாலப்பணி நடந்து வருவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாலையில் இருந்தே அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்ட நிலையில் இரவு 12 மணி நெரிசல் அதிகளவில் இருந்தது. மேலும் குறைந்த போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தால் நெரிசல் அதிக நேரம் நீடீத்தது.

இதனிடையே வெளியூர் செல்வதற்காக அரசு விரைவுப்பேருந்து செயலி முன்பதிவு செய்ய முயன்ற போது இரவு 8 மணி முதல் வேலை செய்யவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பேருந்தில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது அடிக்கடி நடைபெறுவதாகவும், இதனை தீர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.