வீடு கட்டும் காண்ட்ராக்டர் ரூ.1.70 கோடி வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார் – நடிகர் பாபி சிம்ஹா புகார்

கொடைக்கானலில் வீடுகட்ட 1 கோடியே 70 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒப்பந்ததாரர் தன்னை ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார். நடிகர் பாபி சிம்ஹா பேத்துபாறையில் தனது பெற்றோருக்காக வீடுகட்டி வருகிறார்.…

கொடைக்கானலில் வீடுகட்ட 1 கோடியே 70 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒப்பந்ததாரர் தன்னை ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா பேத்துபாறையில் தனது பெற்றோருக்காக வீடுகட்டி வருகிறார். ஒப்பந்ததாரர் ஜமீர் என்பவர் கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பணிகளை முடிக்காமல் பாதியிலே விட்டுவிட்டு சென்றுவிட்டதாக ஜமீர் மீது பாபி சிம்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கேட்டதற்கு ஒப்பந்ததாரர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.