சதீஷ் நடிக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார். தற்போது, நடிகர் சதீஷ் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ் சேவியர் இயக்குகிறார். சென்னையில் பெரும் பொருள்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
மேலும், முக்கிய வேடங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
https://twitter.com/Ags_production/status/1727323164554965015
இந்த படத்தின் டிரைலரை அண்மையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இந்நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் படம் வரும் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. காமெடி நடிகர்களில் சிலர் தற்போது திரில்லர் படங்களில் கதாநாயகர்களாக அறிமுகமாவதும், அப்படங்களில் வரும் நகைச்சுவைகள் வரவேற்கத்தக்க வகையிலும் அமைந்துள்ளதால், இப்படமும் அந்த வகையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







