முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு

இடைத் தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்  இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா களம் இறக்கப்பட்டார். அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்த நிலையில் கடந்த 4ந்தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு அடுத்த மாதம் 27ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத் தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தலில் திமுகவே களம் இறங்குமா அல்லது மீண்டும் காங்கிரசுக்கு அத் தொகுதியை ஒதுக்குமா என்கிற கேள்வி எழுந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இடைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

45வது புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்..

G SaravanaKumar

ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

திருமணத்தை தாண்டிய உறவு: கணவனை கொலை செய்த மனைவி-காதலனுடன் கைது!

Gayathri Venkatesan