ஹாக்கி உலக கோப்பை போட்டியில் சிலி அணியை 14-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதில் ஒட்டுமொத்தமாக 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு 16 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் உள்ள 4 அணிகளும், மூன்று அணிகளுடனும் தலா ஒரு போட்டியில் விளையாடும். குரூப்பில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து – சிலி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இதனால் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. ஆட்ட நேர முடிவில் 14 – 0 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. இதனால் நெதர்லாந்து காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.







