அமைதி நிலவும் நம் நாட்டில் ஒற்றுமையை குலைக்கவே காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) செல்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து ராய்ப்பூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய இணை செயலாளர் டாக்டர் மன்மோகன் வைத்யா கூறியதாவது, நம் நாட்டில் பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கும் காங்கிரஸ் கட்சியால் எப்படி ஒற்றுமையை உருவாக்க முடியும். இந்தியா என்பது இந்துத்துவா என்ற ஒன்றால் உருவானது. இதனை சர்வதேச உலகம் புரிந்து கொண்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. இது ஒரு புனிதமான செயல். நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு இந்த ஒற்றுமை யாத்திரை மூலம் எப்படி வேலை பெற்றுத்தர முடியும். காங்கிரஸ் தனது அரசியல் சுய லாபத்திற்காக மட்டுமே இந்த யாத்திரையை நடத்துகிறது என்றார்.
மேலும், ராய்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல்வேறு பிரிவுகள் இணைந்து நடத்திய மாநாடு குறித்து பேசிய டாக்டர் வைத்யா, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில் 36 பிரிவுகளை சேர்ந்த 240 ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கிராம பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மனித ஆற்றலை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை தன்னிறைவு அடைய செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடினோம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஆன்லைன் மூலம் லட்ச கணக்கான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து நாட்டின் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகிகள் தட்டாரியா ஹோசபெல்லே, டாக்டர் கிருஷ்ண கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.