மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம் – சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்துள்ளார். அப்போது சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்க வருகைத் தந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு செல்கிறார். அங்கு, மாவட்டத் தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர், மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். மாலை 4 மணியளவில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.