காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் என்ற பிகே இணைவார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகே கொடுத்த பிளான் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தலைமையிலான டீம் அறிக்கை ஒன்றை சமர்பித்தது. இதற்கிடையே பிகே காங்கிரஸ் கட்சியில் இணைய போகிறார். பல்வேறு மேஜிக்கள் செய்து 2024 ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிநடை போட வைப்பார் என மெகா டாக் ஷோக்கள் எல்லாம் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், காங்கிரஸ் அளித்த ஆஃபரை புறந்தள்ளினார் பிகே.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்னவாக இருக்கும் என டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, பிகே காங்கிரஸ் கட்சியில் யார் யாருக்கெல்லாம் சீட் கொடுக்க வேண்டும். அவர் வகுத்து கொடுக்கும் வியூகத்தை மட்டுமே கட்சியினர் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கமிட்டிகளை அவமதித்ததுபோல் ஆகிவிடும் என சீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இல்லாமல், எல்லா முடிவுகளையும் சோனியா காந்தி ஒருவரிடம் மட்டுமே தெரிவிப்பேன் என்றாராம் பிகே. இது காங்கிரஸ் போன்ற பேரியகத்தில் நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று என காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்களாம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி மட்டுமே அக்கட்சி சிந்திக்க வேண்டும். அதற்கு முன்னர் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களை புறந்தள்ளிவிடலாம் என்ற பிகேவின் கருத்தும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் எடுபடவில்லை.
மிக முக்கியமாக, காங்கிரஸ் கூட்டணி யாருடன் அமைக்க வேண்டும் என்ற கமிட்டியின் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்றும், மம்தா, சந்திர சேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி போன்றோருடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க வேண்டும். அப்போதுதான் பிரதமர் மோடியை வீழ்த்தும் வித்தையை செயல்படுத்த முடியும் என பிகே கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவருடைய கிளைன்ட் எல்லோருக்கும் விசுவாசமாக இருக்கனுமுன்னு சொல்லுகிறாரா ? என கிண்டல் அடித்துள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால்தான் காங்கிரஸ் கட்சியில் பிகே இணையாமல் சென்றதற்கான முக்கிய விடயங்கள் என டெல்லி பட்சிகள் கூறுகின்றன.
இராமானுஜம்.கி